நியூயார்க் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ் அமைப்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி 8 பேர் கொல்லப்பட காரணமாக அமைந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

குறித்த அமைப்பின் உத்தியோகப்பூர்வ நாளேடான அல்-நபாவில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

அதில் தாக்குதலை நடத்திய Sayfullo Saipov தங்களது அமைப்பின் வீரர் எனவும், குறித்த தாக்குதலை முன்னெடுத்தமைக்கு பாராட்டும் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் குறித்த தகவலை மறுத்துள்ளதுடன், தாக்குதல் நடத்திய நபர் ஐ.எஸ் பாணியில் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம், ஆனால் அவருக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்பு உள்ளனவா என்பது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்ட பின்னரே தெரியவரும் என்றனர்.

இதனிடையே நியூயார்க் தாக்குதல்தாரிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணையின்போது ஆம் அல்லது இல்லை என்ற ஒற்றை வார்த்தைகளில் மட்டுமே அவர் பதில் அளித்துள்ளார்.

தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அவர் மருத்துவ ரீதியான சில சலுகைகளை கோரியுள்ளதாகவும், அவை ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது குறித்து வரும் நாட்களில் தெரியவரும் என்கின்றனர் அதிகாரிகள்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...