திடீரென செயலிழந்த டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு: நடந்தது என்ன?

Report Print Raju Raju in அமெரிக்கா

டுவிட்டர் ஊழியர் செய்த தவறால் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கம் 11 நிமிடங்கள் செயலிழந்துபோனது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டர் சமூகவலைதளத்தில் தனது பணிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருகிறார்.

அவரை 41.7 மில்லியன் பேர் டுவிட்டரில் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், நேற்று 11 நிமிடங்கள் டிரம்பின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கமான @realdonaldtrump செயலிழந்தது.

அந்த சமயத்தில், ’மன்னிக்கவும், அந்த பக்கம் இல்லை’ என்ற வாக்கியம் டிரம்ப் ஐடி-ஐ கிளிக் செய்த போது காட்டப்பட்டது.

பிறகு ஒருவழியாக 11 நிமிடங்கள் கழித்து மீண்டும் டுவிட்டர் பக்கம் செயல்பாட்டுக்கு வந்தது.

டுவிட்டர் ஊழியரின் தவறால் இப்படி நடந்துவிட்டதாகவும், இது குறித்து ஆராய்ந்து இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் டுவிட்டர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...