புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு: அமெரிக்காவில் கலக்கும் தமிழ் இளைஞர்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் உணவு விடுதி நடத்தி வரும் தமிழ் இளைஞர் இலவச உணவுகளை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புரட்டிப் போட்ட இர்மா புயல் கரைகடந்தபோதும் மழையின் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வரவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் 3 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழக உணவு விடுதியான அம்மா கிச்சன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்புத் திட்டமான அம்மா உணவகத்தை பின்பற்றி அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக அம்மாஸ் கிச்சன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் தினேஷ்குமார்.

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் போன்றே, குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவதால், இந்த அம்மாஸ் கிச்சனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் தரமான உணவு, குறைந்த விலை, மண்ணின் சுவை உள்ளிட்டவற்றை அளித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் மனதில் இடம்பிடித்த தினேஷ்குமார். தற்போது இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி மண்ணின் பெருமையை பறைசாற்றியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...