பிரபல பாடகிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்த முன்னணி நடிகை

Report Print Raju Raju in அமெரிக்கா

உலகப்புகழ் பெற்ற பாடகி செலினா கோம்ஸ்க்கு முன்னணி நடிகை பிரான்சியா ரைஸா தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார்.

செலினா கோம்ஸ் உலக புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். லூபஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டிருந்த செலினாவுக்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

செலினாவுக்கு அவரின் தோழியும், பிரபல அமெரிக்க நடிகையுமான பிரான்சியா ரைஸா தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள செலினா கூறுகையில், என் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

என் குடும்பத்திற்கு மற்றும் அறுவை சிகிச்சைக்கு உதவி புரிந்த மருத்துவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.

எனக்கு சிறுநீரகம் தானம் அளித்த என் அழகிய தோழி பிரான்சியா ரைஸாவுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என விவரிக்க வார்த்தைகள் இல்லை.

எனக்காக மிகப்பெரிய தியாகத்தை அவர் செய்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...