புயலுக்கு பயந்து குடியிருப்புக்குள் புகுந்த முதலை

Report Print Arbin Arbin in அமெரிக்கா
169Shares
169Shares
ibctamil.com

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வி புயலுக்கு முதலை ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து தஞ்சமடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் தாக்கிய ஹார்வி புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருவெள்ளம், உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது.

இந்த நிலையில் புயலுக்கு இடம்பெயர்ந்த கூட்டத்தில் முதலை ஒன்று குடியிருப்பினுள் புகுந்து தஞ்சமடைந்துள்ளது. குடியிருப்பின் உரிமையாளர் புயல் ஓய்ந்த நிலையில் வீடு திரும்பியபோது வீட்டுக்குள் 9 அடி நீளமான முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Brian Foster என்ற அந்த நபர் உரிய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு தகவலை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து வனவிலங்கு தடுப்பு குழுவினரும் Brian Foster உம் இணைந்து குறித்த முதலையை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையில் இறங்கினர்.

சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முதலையின் வாயினை அவர்கள் மூடிக் கட்டியுள்ளனர். இதனையடுத்து குறித்த முதலையை வனவிலங்கு சரணாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் மிக அதிக அளவில் முதலைகள் கண்டுவருவதாக கூறப்படுகிறது. பல சமயங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் முதலைகள் சர்வசாதாரணமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்