முதல் குழந்தையை பெற்றெடுத்த ஆண்

Report Print Basu in அமெரிக்கா
1262Shares

அமெரிக்காவில் ஆண் ஒருவர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Portland-ல் வாழ்ந்து வரும் Trystan Reese என்ற திருநங்கையாக மாறியுள்ள ஆணே இவ்வாறு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு Leo Murray Chaplow என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எப்போதாவது ஒரு ஆண் குழந்தை பெற்றெடுக்க முடியாது என கூறியிருந்தால், தற்போது திருநங்கை ஆணுக்கு ஒரு குழந்தை உள்ளது என கொண்டாடும் வகையில் குழந்தை புகைப்படத்துடன் Trystan Reese சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஓரினச் சேர்க்கையாளர்களான Reese, Biff Chaplow தம்பதி, ஏற்கனவே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது குடும்பத்தை விரிவாக்க நினைத்த Reese, Biff Chaplow தம்பதிகள், இணையத்தின் உதவியுடன் chronicling முறையில் ஒன்றாக தங்கள் முதல் உயிரியல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கையாளர்களான Reese, Biff Chaplow தம்பதி முதல் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளது சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்