ரஷ்யா மீது பொருளாதார தடை: ஒப்புதல் அளித்தார் டிரம்ப்

Report Print Raju Raju in அமெரிக்கா
178Shares

ரஷ்யா மீது கொண்டு வந்துள்ள பொருளாதார தடைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் உக்ரைன் மற்றும் சிரியா விவகாரத்தில் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி ரஷ்யாவைச் சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், உளவுத் துறை அமைப்புகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருப்பதால் அந்த துறையில் ரஷ்யா மீது அமெரிக்கா தடை விதிக்கவில்லை.

இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் வழங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மட்டுமன்றி, ஈரான், வடகொரியா மீதும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் சட்ட மசோதாக்களுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்