ஹொட்டல் அறையில் தானாக பறந்த பொருட்கள்: ஆவியா? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா
327Shares

ஹொட்டல் அறையில் ஒருவர் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் தானாக பறந்த அமானுஷ்ய நிமிடங்களை வீடியோவாக பதிவு செய்து குறித்த நபர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் Texas மாகாணத்தில் உள்ள ஹொட்டல் அறையில் Frank Ramirez என்ற நபர் சில தினங்களுக்கு முன்னர் தங்கியிருந்தார்.

மாலை நேரம் நெருங்கும் வேளையில் Frank தங்கியிருந்த அறையில் சில விசித்திரமான அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்க தொடங்கியது.

அறையில் இருந்த போன் ரிசீவர் தானாக கீழே விழுவது, அறையில் இருந்த பொருட்கள் பறப்பது, கை கழுவும் இடத்தில் இருந்த துணி தானாக பறந்து கீழே விழுவது போன்ற விடங்கள் அரங்கேறியுள்ளது.

முதலில் இதை கண்டு பயந்த Frank பின்னர் தைரியத்தை வரவழைத்து கொண்டு எல்லாவற்றையும் வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

Frank பதிவு செய்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட இதுவரை அதை 7.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

பலர் இது உண்மைதானா என குழம்பியுள்ளனர். அதே போல இது உண்மை தான் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமானுஷ்ய அனுபவத்தை முதல் முறையாக தற்போது தான் வாழ்க்கையில் அனுபவித்துள்ளதாக Frank கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்