துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்: காதலன் கைது

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்தவர் ஜெனிபர் லண்டனோ (31). இவர், கடந்த 25-ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் நியூயார்க்கின் ப்ரூக்ளின் ஆற்றில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு அழுகிய உடல் மிதந்து வந்துள்ளது.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால், பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பொலிசார் அப்பெண்ணின் இடுப்பு பகுதியில் வரையப்பட்டிருந்த டாட்டூவை வெளியிட்டனர்.

அந்த டாட்டூவை கண்ட ஜெனிபர் லண்டனோவின் தாயார் இதே போன்று தனது மகளும் டாட்டூ வரைந்திருப்பார் என பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் ஹட்சன் ஆற்றில் பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட கால் மிதந்து வந்துள்ளது. இதைக் கண்ட பெண் ஒருவர் இது தொடர்பாக பொலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பொலிசார் ஏற்கனவே இறந்த ஜெனிபர் லண்டனோவின் உடலும், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள காலும் ஒரே நபருடையதுதானா என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி துண்டு துண்டாக கொலை செய்யப்பட்ட ஜெனிபர் லண்டனோவின் உடல் பாகங்களை தேடும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் பொலிசார் ஜெனிபரின் காதலரான ரபேல் லோலோஸ் என்பவரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவரிடம் பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெனிபர் காணாமல் போனதிலிருந்து அவரது கிரெடிட் கார்டை ரபேல் பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும், அவரது வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, குளியலறையில் ஜெனிபரின் இரத்தக் கறை படிந்துள்ளதை பொலிசார் கண்டுபித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments