அமெரிக்காவில் இனவெறியை தட்டிக்கேட்ட இருவர் குத்திக்கொலை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் இஸ்லாமிய பெண்களை இனவெறியோடு பேசி வம்பு இழுத்த நபர், அதை தட்டிக் கேட்ட இருவரை கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் போர்ட்லேண்ட்டில் பயணிகள் செல்லும் ரயிலில் 2 இஸ்லாமிய பெண்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியன் (35) என்ற இளைஞர் அந்த இஸ்லாமிய பெண்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசி வம்பு செய்தார்.

அதை ரயிலில் பயணம் செய்த சிலர் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மி ஜோசப் தான் வைத்திருந்த கத்தியால் 3 பேரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். இந்த சம்பவத்தால் ஓடும் ரயிலில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிசார் கொலையாளி ஜெர்மி ஜோசப் கிறிஸ்டியனை கைது செய்தனர். மட்டுமின்றி படுகாயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க இஸ்லாமிய சமூக கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “2015 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஐ.எஸ்.

தீவிரவாதிகள் குறித்து டொனால்டு டிரம்ப் தீவிரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கினார். அன்று முதல் அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான விரோத போக்கு 50 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments