பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் 9 வயது சிறுமி, தனது அப்பா இரவு முழுவதும் தன்னிடம் செய்ததைப் பற்றி அறிந்து கொள்ள பள்ளி வகுப்பறையில் ஆபாசப்படம் பார்த்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் சான் அன்டோனியோ பகுதியை சேர்ந்தவர் 31 வயதான அந்தோனி கேரே, இவரின் 9 வயது மகள் பள்ளியில் ஐபேடில் ஆபாசப்படம் பார்த்து சிக்கியுள்ளார்.

சம்பவம் குறித்து பள்ளி ஊழியிர் சிறுமியிடம் விசாரித்த போது தனது தந்தை தினமும் இரவு முழுவதும் தூங்க விடாமல் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பள்ளி ஊழியர்கள் குழந்தை பாதுகாப்பு சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவரது தந்தை கடந்த ஒரு வருடங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை அந்தோனி கேரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 75,000 டொலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் தண்டனை முறைப்படி குழந்தை பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைதண்டனையும், அதிகபட்சம் 99 ஆண்டுகள் சிறைதண்டனையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments