டொனால்ட் டிரம்ப்பின் ரமலான் வாழ்த்து செய்தி இதுதான்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரமலான் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், வன்முறையை நிராகரித்தல், அமைதி வழியை நாடுதல், வறுமையால் வாடுவோருக்கு உதவுதல் இவற்றையே ரமலான் புனிதக் காலம் உணர்த்துகிறது.

பிரிட்டன் தீவிரவாத தாக்குதல், எகிப்தில் கிறித்துவர்கள் மீதான தாக்குதலால் உலகமே துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில் ரமலான் மாதம் தொடங்கியுள்ளது.

இது ரமலானின் நோக்கத்திற்கு எதிரானதாகும், பயங்கரவாதிகளை வீழ்த்த வேண்டும், இதுபோன்ற தாக்குதல்கள் தான் நம்மை மேலும் பலப்படுத்துகின்றன.

வன்முறையை கைவிட்டு அமைதி வழியை பின்பற்றி உலகம் முழுவதும் அமைதியை நிலவச் செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments