விமானம்-லொறி மோதி விபத்து: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் லொறி மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்து 149 பயணிகளில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

149 பயணிகளுடன் மெக்சிகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணித்த ஏரோமெக்சிகோ நிறுவனத்தின் போயிங் 642 ரக ஜெட் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மோதிய வேகத்தில் அந்த லொறி நிலைதடுமாறி, கவிழ்ந்து விழுந்தது, விமானத்தின் வலதுப்புற இறக்கையும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லொறியில் இருந்த இரு பெண்கள் உள்பட எட்டுபேர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

விமானத்திற்கு சிறிய சேதமே ஏற்பட்டுள்ளது என விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரோமெக்சிகோ நிறுவனத்தின் தரப்பிலும் விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments