குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் மரணம்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் இதய செயலிழப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 10-ம் திகதி ஈக்வேடார் நாட்டிலிருந்து வந்த இந்தியர் அதுல் குமார் பாகுபாய் படேல் (58) உரிய ஆவணங்களை தன்னுடன் கொண்டு வராததால், அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் அவரை அந்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

விமான நிலையத்தில் தங்கியிருந்த படேலிடம் கடந்த இரு நாட்களாக அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் அவரின் உடல்நிலை மோசமாகவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இதயம் செயலிழந்ததால் சிகிச்சை பலனின்றி படேல் உயிரிழந்தார்.

அவரது மரணத்தை முறைப்படி அமெரிக்க குடியுரிமை துறை இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்திவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த நிதிஆண்டில் மட்டும் படேலுடன் சேர்த்து 8 பேர் அந்நாட்டு குடியுரிமை விசாரணையின் போது மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments