அமெரிக்கா வீசிய குண்டுவீச்சில் நடந்தது என்ன? வெளியானது பரபரப்பு வீடியோ

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் ஐஸ் தீவிரவாதிகளை குறித்து அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நன்கர்ஹர் என்ற இடத்தில் முகாமிட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து, 13 ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு அமெரிக்க இராணுவம் அதிரடியாக வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது.

அமெரிக்கா பயன்படுத்திய MOAB எனப்படும் குண்டு சுமார் 21,000lbs எடையுள்ளது.

இந்த குண்டு 300 மீற்றர் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அமெரிக்கா முதன் முறையாக இந்த ஆயுதத்தை போரில் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா வீசிய குண்டு வீச்சில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த குண்டு வீச்சு தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 92 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments