வாலிபரை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இளம்பெண் கைது

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்காவில் கார் ஓட்டுனர் ஒருவரை கத்தி முனையில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓஹியோ மாகாணதில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பிரிட்டனி கார்டர் என்ற இளம்பெண் வசித்து வருகிறார்.

இவருக்கு போதை பழக்கம் இருப்பதுடன் ஆண் நண்பர்களும் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் Findlay நகரில் இரவு விருந்திருக்கு நண்பர்கள் இருவருடன் சென்றுள்ளார்.

விருந்து முடிந்ததும் வீட்டிற்கு திரும்ப கால் டாக்ஸி ஒன்றை வரவழைத்துள்ளார்.

கார் சென்றுக்கொண்டு இருந்தபோது ‘ஓட்டுனருடன் நான் உறவுக்கொள்ள வேண்டும்’ என பிரட்டனி கார்டர் தெரிவித்துள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த நண்பர் ஓட்டுனரிடம் கத்தியை காட்டி காரை ஓரமாக நிறுத்துமாரு மிரட்டியுள்ளார்.

பின்னர், கத்தி முனையில் மிரட்டப்பட்ட ஓட்டுனருடன் பிரட்டனி உறவுக்கொண்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு ஓட்டுனரிடம் இருந்த 32 டொலர் பணத்தை திருடிய பிரட்டனி நண்பர்களுடன் அங்கிருந்து தப்பியுள்ளார்

இவ்விவகாரம் வெளியே தெரிந்ததும் பிரட்டனி கார்டர் அதிரடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால், நண்பர்கள் இதுவரை பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர்.

இளம்பெண்ணை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது வாலிபரை பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments