10 வயது சிறுமியை கற்பழித்த கொடூரன்: நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்த சம்பவம்

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க நாட்டில் 10 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தது மட்டுமில்லாமல் சிறுமியின் தாத்தா மற்றும் பாட்டியை கொடூரமாக கொலை செய்த நபர் ஒருவர் தீர்ப்பிற்கு அச்சப்பட்டு நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓஹியோ மாகாணத்தில் உள்ள Youngstown நகரில் Corrine Gump(10) என்ற சிறுமியை தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

இவர்களது வீட்டிற்கு அருகில் Robert Seman Jr(48) என்ற நபரும் வசித்து வந்துள்ளார். மூவரிடமும் பழக்கம் ஏற்பட்டதால் அவர்களது வீட்டிற்கு நபர் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நபர் சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளார். இச்சம்பவம் அடிக்கடி தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இக்கற்பழிப்பு தொடர்பான விஷயம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

ஆனால், தன்னை கைது செய்வதற்கு முன்னதாக சிறுமி மற்றும் அவரது தாத்தா, பாட்டி ஆகிய மூவரையும் வீட்டிற்குள் பூட்டி உயிருடன் தீவைத்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பிறகு நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நபரின் மீதான 3 கொலை மற்றும் கற்பழிப்பு குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

மேலும், அடுத்த வாரம் இறுதி தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நேற்று குற்றவாளி நீதிமன்ற விசாரணைக்காக வந்துள்ளார்.

விசாரணை முடிந்ததும் அவரை அழைத்துக்கொண்டு இரண்டு பொலிசார் 4-வது மாடியில் உள்ள வராண்டாவில் நடந்துச் சென்றுள்ளனர்.

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் 4-வது மாடியிலிருந்து குற்றவாளி கீழே குதித்துள்ளார்.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக கீழே ஓடியுள்ளனர். ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் குற்றவாளி ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே பலியானார்.

மரண தண்டனை தீர்ப்பிற்கு அச்சப்பட்டு குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments