பள்ளி வயதில் காதல்: 64 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள்

Report Print Raju Raju in அமெரிக்கா

பள்ளிப்பருவத்தில் காதலித்த இருவர் 64 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் James Bowman, இவர் கடந்த 1952ல் பள்ளியில் படிக்கும் போது Joyce Kevorkian என்னும் பெண்ணை காதலித்து வந்தார்.

பள்ளிபடிப்பு முடிந்த பின்னர் காதலர்கள் இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்று விட்டனர். இருவருக்கும் வேறு ஒருவருடன் பின்னர் திருமணம் ஆகிவிட்டது.

தற்போது இருவருக்கும் 81 வயதாகிறது. இருவரும் இடைபட்ட இந்த காலகட்டத்தில் பள்ளி தோழர்கள் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 4 தடவை தான் சந்தித்துள்ளனர்.

James மனைவி தற்போது இறந்துவிட்டார், அதே போல Joyceன் கணவரும் இறந்து விட்டார்.

இதனிடையில் Jamesம் Joyceம் பழைய பள்ளி தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மீண்டும் தற்போது சந்தித்தனர்.

அப்போது தங்களின் பசுமைகால காதல் பற்றி இருவரும் மனம் விட்டு பேசினார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு இன்னும் காதல் இருப்பதையும் உணர்ந்து கொண்டார்கள்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து தங்களின் பேரக்குழந்தைகளின் முன்னிலையில் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.

இது தங்கள் வாழ்க்கையில் நெகிழ்ச்சியான தருணம் என James மற்றும் Joyce கூறியுள்ளார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments