டிரம்ப் உயிருக்கு ஆபத்து? கொலைப்பட்டியலை வெளியிட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்கர்களை குறிவைத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் உச்சகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்கர்களை குறி வைத்து அந்த அமைப்பானது கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 8,786 அமெரிக்கர்களின் பெயர் மற்றும் முகவரியுடன் அவர்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பிரசுரித்துள்ளனர். மட்டுமின்றி ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காணொளி செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பு கொலைப்பட்டியலை வெளியிடுவது இது முதன் முறையல்ல. ஆனால் பெயர் மற்றும் தெளிவான முகவரியுடன் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது இதுவே முதன் முறை.

கடந்த முறை வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த 40 பேர் அரசு தொடர்புடைய பணிகளை மேற்கொண்டு வந்தவர்கள். அதனைத் தொடர்ந்து 76 பேர் கொண்ட கொலைப்பட்டியலை ஐ.எஸ் வெளியிட்டது.

பின்னர் நியூயார்க் குடிமக்கள் 3600 பேர், டெக்சாஸ் குடிமக்கள் 1543 பேர் பட்டியலையும் வெளியிட்டது.

தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில், ’இவர்களை எங்கு கண்டாலும் தீர்த்து விடுங்கள்’என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கர்களுக்கு வழங்கும் செய்தி இது எனவும், உங்கள் ஜனாதிபதிக்கான சிறப்பு செய்தி இதுவெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் எதிர்ப்பு எங்களை மேலும் வலுவடைய செய்யும், ஐ.எஸ் அமைப்பு புது வகையான போரை அமெரிக்கா மீது தொடுக்க உள்ளது. மிக விரைவில் அது நடந்தே தீரும் எனவும் அந்த கொலைப்பட்டியலின் முடிவில் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பட்டியலில் ஜனாதிபதி டிரம்பின் பெயர் இருக்கலாம் எனவும், இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் எழ வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments