தனது முதல் சம்பளத்தால் டிரம்ப் என்ன செய்தார்?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப் தனது முதல் சம்பளத்தை நாட்டின் தேசிய பூங்காக்களின் வளர்ச்சிக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்றார்.

தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், தனக்கு அளிக்கப்படும் சம்பளம் முழுவதும் பொதுப்பணிக்களுக்காக நன்கொடையாக அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் டிரம்ப் தனது முதல் மாத சம்பளத்தை என்ன செய்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதில் தன்னுடைய ஆண்டு வருமான 4 இலட்சம் டொலரிலிருந்து முதல் காலாண்டு சம்பளமான 78 ஆயிரத்து 333 டொலர்களை டிரம்ப் பெற்றுள்ளார்.

அதை அவர் நாட்டின் தேசிய பூங்காக்களின் வளர்ச்சிக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்.

இதை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சான் ஸ்பைசர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments