கிண்டலுக்கு ஆளான டொனால்டு டிரம்பின் மனைவி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலேனியா டிரம்பின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கிண்டல் செய்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலேனியா டிரம்பின் புகைப்படத்தை வெள்ளை மாளிகையாளது நேன்று அதிகாரப்பூர்வமாக தங்களது தளத்தில் பதிவேற்றம் செய்தது.

அந்த புகைப்படத்தில், மெலேனியா கருப்பு நிற ஆடை அணிந்து, தனது கைகளை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

ஒரு நாட்டின் முதல் பெண்மணியாக இருந்து கொண்டு Muppet குழந்தைகள் பொம்மை போன்று தனது முகத்தினை வைத்துள்ளார் என கேலி செய்துள்ளனர்.

ஒரு சிலர் Robot போன்று இருக்கிறார் என்றும் பலர் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முகம் போன்று அவரது முகம் உள்ளது எனவும் கிண்டல் செய்துள்ளனர்.

மேலும், அந்த புகைப்படத்தின் Background சிலந்தி வலை போன்று இருப்பதால், சிலந்தி வலைக்கு முன்னால், 25 கேரட் வைர மோதிரத்துடன் போஸ் கொடுத்துள்ளார் என கிண்டல் செய்துள்ளனர்.

டுவிட்டர் பக்கத்தில், மெலேனியாவை கிண்டல் செய்து டுவிட்கள் வெளியான வண்ணம் உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments