பான்கேக் சாப்பிட்ட அழகிய மாணவிக்கு நேர்ந்த சோகம்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பான்கேக் (PanCake) தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார்.

கொலம்பியா மருத்துவ கல்லூரியில் Caitlin Nelson(20) என்பவர் பயின்று வந்துள்ளார். பான்கேக் சாப்பிடும் போட்டியானது இந்த கல்லூரியில் நடத்தப்பட்டது, அதில் Caitlin கலந்துகொண்டார்.

போட்டியின்போது, 4 துண்டு கேக்குளை இவர் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவர் இறப்பிற்கான காரணம் அதுவாக இருக்காது.

பான் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அழகு மற்றும் அறிவு நிறைந்த இந்த மாணவியின் உயிழப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments