இவரை தெரியுமா? உலகமே போற்றும் தமிழன்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள செனட் தேர்தலில் மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை போட்டியிட உள்ளார்.

மின்னஞ்சலை கண்டுபிடித்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆனவர் சிவா அய்யாதுரை.

இவர் தற்போது CytoSolve என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள செனட் சபை உறுப்பினர் தேர்தலில் Massachusetts மாகாணத்தில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார்.

வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் உண்மைக்காக போராட இருப்பதாகவும், அமெரிக்கா வாய்ப்புகளுக்கான தேசம் எனவும் சிவா அய்யாத்துரை தெரிவித்துள்ளார்.

யார் இந்த சிவா அய்யாதுரை

இன்று உலகம் முழுவமே இமெயிலை பயன்படுத்தி வருகிறோம், இதை கண்டுபிடித்தது ஒரு தமிழன்..ஆனால் அவரை கண்டுகொள்ள இன்று ஆளில்லை.

இந்தியாவின் பாம்பேயில் பிறந்த தமிழனான சிவா அய்யாதுரை, தன்னுடைய 7 வயதிலேயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

நியூஜெர்சியில் உள்ள லிவிங்ஸ்டன் மேல்நிலைபள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது மின்னஞ்சல் குறித்து பணியாற்றினார்.

சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்னர் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர், மெமோ, அட்டாச்மெண்ட், அட்ரஸ் புக் உட்பட மின்னஞ்சலை உருவாக்கினார்.

ஆனால் இன்றளவும் முறையான அங்கீகாரம் இன்றி ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

1982ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் திகதி அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் என அங்கீகாரம் வழங்கினாலும், வரலாற்றில் இடம்பெறவில்லை.

நிறவெறி காரணத்தால் தன்னை மேற்கத்திய ஊடகங்கள் பின்தள்ளுவதாகவும், உலகளவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் சிவா அய்யாதுரை அவர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments