அமெரிக்காவில் லொறி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து! 13 பேர் பலி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் தேவாலத்திலிருந்து கிளம்பிய பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் Texas மாகாணத்தில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தேவாலயத்திலிருந்து அதன் ஊழியர்கள் 14 பேரை ஏற்றி கொண்டு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.

ஓட்டுனருடன் சேர்ந்து மொத்தம் 15 பேர் பேருந்தில் இருந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் முதியவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், முக்கிய சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரில் வந்த ஒரு டிரக் லொறி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஓட்டுனர் உட்பட 13 பேர் பலியானார்கள். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments