அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி இவான்கா டிரம்ப்?

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவியில் அமர டொனால்ட் டிரம்பின் மகளான இவான்கா டிரம்ப் இப்போதே நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக பரபரப்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி டிரம்பின் மகளான இவான்கா அரசு நிர்வாக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

இவான்காவின் கணவரான Jared Kushner என்பவர் டிரம்பின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக பதவி வகித்து வருகிறார்.

அரசு நிர்வாகத்தில் தன்னுடைய மகளான இவான்காவிற்கு ஆர்வம் அதிகமாக இருப்பதால் வெள்ளை மாளிகையில் இவான்காவிற்கு ஒரு அலுவலகத்தை டிரம்ப் ஒதுக்கினார்.

ஆனால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'நிர்வாக பதவி எதையும் வகிக்காமல் வெள்ளை மாளிகையில் இவான்காவிற்கு அலுவலகம் ஒதுக்குவது தவறு' என விமர்சனம்.எழுந்தது.

இந்த விமர்சனத்தை தொடர்ந்து தன்னுடைய முதன்மை உதவியாளராக இவான்காவை பதவியில் அமர்த்துவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதியுடன் முழு நேரமும் இருப்பதுடன், அவருடைய முக்கிய நடவடிக்கைகளை கவனிக்கும் கூடுதல் பொறுப்பு தற்போது இவான்காவிற்கு கிடைத்துள்ளது.

இந்த பதவியை தொடர்ந்து எதிர்காலத்தில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவியில் அமர இவான்கா இப்போதே அச்சாரம் போட்டுள்ளதாக அரசியல் விமர்சனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments