இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அம்மா, மகன் கொலை: அமெரிக்காவில் பயங்கரம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐடி ஊழியர் மற்றும் அவரது ஆறு வயது மகன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் பணியாற்றி வந்த சசிகலா நர்ரா மற்றும் அவரது மகன் மர்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இந்திய வம்சாவெளியை சேர்ந்த அம்மா, மகன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட நபர்கள் இந்திய வம்சாவெளியை சேர்ந்தவர்கள் என்பதாலேய அம்மா, மகன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த சம்பவத்திற்கு எந்த வித முன்விரோதமும் கிடையாது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments