பொது வெளியில் டிரம்பின் விசித்திர செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னை சந்திக்க வந்த லொறி ஓட்டுனர்களின் லொறியில் ஏறி ஹார்ன் அடித்த செயல் வீடியோவாக வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முந்தைய ஜனாதிபதி ஒபாமா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்தார்.

இது சம்மந்தமாக பேச டிரம்பை அமெரிக்காவை சேர்ந்த லொறி ஓட்டுனர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வெள்ளை மாளிகையில் அவரை சந்தித்தனர்‌.

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய டொனால்டு டிரம்ப் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

பின்னர் வெள்ளை மாளிகையின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறியின் அருகில் வந்த டிரம்ப் அதன் உள்ளே ஏறினார்.

அதன்பின்னர் லொறியின் ஹாரனை அவர் வேகமாக அழுத்தினார். அதை பார்த்த அருகிலிருந்தவர்கள் சிரித்து ஆரவாரம் செய்தனர்.

பின்னர் லொறியை ஓட்டுவது போல செய்கை செய்த டிரம்ப் அதிலிருந்து கீழே இறங்கினார். அவரின் திடீர் செயலால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments