ஹிட்லரை புகழ்ந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜான் கென்னடி ஜேர்மனியின் ஹிட்லரை புகழ்ந்து பேசியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜான் கென்னடியின் 28-வது வயதில் Hearst பத்திரிகையில் பணியாற்றும்போது யுத்தம் குறித்த செய்திகளை சேகரிக்க ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள பல பகுதிகளை பார்வையிட்டு செய்திகள் சேகரித்து நாடு திரும்பிய கென்னடி தமது பயணம் குறித்த விரிவான பதிவு ஒன்றை அப்போது எழுதியுள்ளார்.

அதில், அவமரியாதைகள் வெறுப்புகளை எதிர்கொண்டு சில ஆண்டுகளில் ஒருவர் எப்படி புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் என்பதை நம்மால் மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லருக்கு தமது நாட்டின் மீது எல்லையற்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் அமைந்தது. ஹிட்லர் வாழ்ந்த முறையால் அவரது வாழ்க்கை ஒரு மர்மமாகவே இருந்தது. அவரது இறப்பும் அந்த மர்மத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்க செய்யும் எனவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளர்.

1945 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த குறிப்பானது தற்போது ஏலத்தில் விடப்படுள்ளது. இதனையடுத்தே கென்னடியின் அந்த குறிப்பு தற்போது பரவலாகியுள்ளது.

கென்னடியின் அந்த குறிப்பேட்டினை கடந்த 70 ஆண்டுகாலம் பாதுகாத்து வந்த பெண்மணி Deirdre Henderson தெரிவிக்கையில், கென்னடி ஒருபோதும் ஹிட்லரின் இனவாதத்தையோ அல்லது அவரால் நிகழ்த்தப்பட்ட கொடும்செயல்களையோ ஞாயப்படுத்தவில்லை என்றும், ஹிட்லரை சூழ்ந்திருந்த மர்மங்களை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

மட்டுமல்ல அந்த குறிப்பேட்டில் ஒரு பகுதியில் கூட நாஜிக்கள் மீது கென்னடி அனுதாபத்தையோ பரிதாபத்தையோ வெளிப்படுத்தவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments