முதன் முறை தாயின் குரலை கேட்ட காது கோளாத குழந்தை: கண்கலங்க வைக்கும் காட்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் காது கோளாத குறைபாடுடன் பிறந்த குழந்தை முதன் முறையாக தனது தாயின் குரலை கேட்டு உணர்ச்சிப் பெருக்கில் கதறி அழுத சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

கரோலினாவை சேர்ந்த 10 மாதமான டாசன் ஷுல் என்ற குழந்தை பிறவி சார்ந்த சைட்டோமேகல்லோ வைரஸ் பாதிப்பால் இரண்டு காதுகளும் கோளாத நிலையில் பிறந்துள்ளது.

கிட்டதட்ட 10 மாதங்கள் எந்த ஒலியும் கேட்காத குழந்தை அமைதியாக வாழ்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், குழந்தையின் சேதமடைந்த உள் காது செயல்பாடுகளுக்கு பதிலாக ஒரு மின்னணு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, டிவி நிகழ்ச்சிகளை பார்த்து சிரித்து வந்த டாசன் ஷுல், முதன் முறை தாய் ஜெசிகா குரலை கேட்டவுடன் உணர்ச்சிப் பெருக்கில் கதறி அழுது ஜெசிகாவிடம் தாவிச் செல்லும் காட்சி காண்போரின் கண்களில் கண்ணீர் வர வைத்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments