மனைவிக்கு பதில் குழந்தையை பெற்றெடுத்த கணவன்: அதிசய சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் மனைவிக்கு பதில் கணவர் கருத்தரித்து குழந்தை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலம்போ நகரை சேர்ந்தவர் Chris (33), இவர் மனைவி Amy (33).

Chris பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் பின்னர் ஆணாக மாறியவர் ஆவார். கணவன் மனைவி இருவரும் குழந்தை பெற்று கொள்ள இரண்டு வருடங்களுக்கு முன்னர் முடிவெடுத்தனர்.

அதன்ப்படி Amy மருத்துவ உயிரிழல் முறைப்படி விந்துக்களை செலுத்தி குழந்தையை பெற முடிவு செய்தார். ஆனால் அவரால் கருத்தரிக்க முடியவில்லை.

சில முறை முயற்சித்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. பின்னர் Amyன் கணவர் Chris கருத்தரித்து குழந்தை பெற முடிவெடுத்து மருத்துவர்களை நாடினார்.

அதன்படி கருத்தரித்த அவர் கடந்த 2014 டிசம்பரில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

Hayden என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தற்போது இரண்டு வயது ஆகிறது.

பின்னர் மருத்துவ உதவியுடன் கருத்தரித்த Amy போன வருடம் சிசேரின் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு Milo என பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து Amy கூறுகையில், என்னால் கருத்தரிக்க முடியாது என முதலில் தெரிந்த பின்னர் மீண்டும் மருத்துவத்தை நாடாலாமா அல்லது கணவரை கருத்தரிக்க செய்யலாமா என குழப்பமாக இருந்தது.

பின்னர் என் கணவரையே கருத்தரிக்க முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்று விட்டோம் .

ஆனால் அதற்கு பின்னர் நான் மீண்டும் குழந்தை பெற்றெடுத்தது இன்னும் மகிழ்ச்சி என அவர் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments