பிரித்தானியாவை தொடர்ந்து அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்: பொலிசார் உட்பட 4 பேர் பலி

Report Print Basu in அமெரிக்கா

பிரித்தானியாவில் பாராளுமன்ற தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவிலும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்கான்சின் மாகணத்தில் மூன்று இடங்கில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொலிசார் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முதலில் ரோத்ஸ்சைல்ட் அருகிலுள்ள மராத்தான் வங்கியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிசார் விரைந்து சென்று பார்த்தபோது குற்றவாளி தப்பி ஓடியுள்ளான்.

பின்னர், 10 நிமிடங்களுக்கு பிறது Schofield அருகிலுள்ள சட்ட நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, வெஸ்டானில் பகுதியில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டு தப்பி ஓடியுள்ளான்.

அடுத்தடுத்து, வங்கி, சட்ட நிறுவனம் என 3 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, 100க்கும் மேற்பட்ட பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிசார், அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments