ரஷ்யாவுடன் தொடர்பு! சர்ச்சையில் அமெரிக்க அட்டார்னி ஜெனிரல்: டிரம்பிற்கு நெருக்கடி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்க அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டு உள்ள டிரம்ப்பின் ஆதரவாளர் ரஷ்ய தூதரை இருமுறை சந்தித்தது பேசியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள ஜெப் செசன்ஸ் மீதே இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செனட் ஆயுத சேவை கமிட்டியில் ஜெப் செசன்ஸ் வகித்த பதவி காரணமாக கடந்த வருடம் ஜூலை மற்றும் செப்டம்பரில் ரஷ்ய தூதர் செர்கை கிஸ்லியாக்கை சந்தித்தார் என நீதித்துறை தெரிவித்துள்ளது.

எனினும், ரஷ்ய அதிகாரிகளிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஜெப் செசன்ஸ் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது ஜனாதிபதி டிரம்பிற்கு நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments