பிரித்தானிய ராணியின் கிரீடத்திற்கு உரிமை கோரிய அமெரிக்கர்: அடுத்த அரசர் தாம் தான் என அறிவிப்பு!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நபர் ஒருவர் பிரித்தானிய அரச குடும்பத்தின் உண்மையான வாரிசு தாம் தான் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கொலராடோ மாகாணத்தில் குடியிருந்துவரும் அல்லன் ஈவான்ஸ் என்பவர் குறித்த உரிமை கோரிக்கையை விடுத்துள்ளார். மட்டுமின்றி இரணாடாம் எலிசபெத் ராணியின் கிரீடமும் தமக்கே சொந்தம் எனவும் தெரிவித்துள்ளார்.

விடாப்பிடியாக இருந்து வரும் ஈவான்ஸ் பேச்சோடு மட்டும் விட்டுவிடாமல் பிரித்தானியாவின் முக்கிய நாளேடு ஒன்றில் விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பிரித்தானியாவின் அரசராவது தமது பிறப்புரிமை எனவும், ராணியாரின் மறைவுக்கு பின்னர் அந்த பொறுப்பு தமக்கே வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி பக்கிங்ஹாம் அரண்மனையை கைப்பற்றும் நோக்கில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தாம் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈவான்ஸ் இதுபோன்ற உரிமை கோரிக்கை விடுப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர் ஜோர்ஜியாவில் உள்ள 400 ஏக்கர் நிலப்பரப்பை தமது மூதாதையர்களின் சொத்து என உரிமை கோரியிருந்தார். மட்டுமின்றி அந்த நிலத்திற்கு உரிய ஆவணங்கள் அனைத்தும் 1901 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சேதமடைந்தது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments