ஏலியனாக மாறுவதற்கு உடலில் உள்ள முக்கிய பாகங்களை இழக்கும் நபர்? அதிர்ச்சி தகவல்!

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் 22 வயது இளைஞன் ஒருவன் தன்னை ஏலியன் போன்று மாற்றிக்கொள்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நடைமுறைகளை பின்பற்றி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் வின்னி ஓ(22). இவர் தன்னை ஏலியன் போன்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்போவதாகவும், அதற்காக தன்னுடைய பிறப்புறுப்பை கூடிய விரைவில் அகற்றிவிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

இவர் தன்னுடைய 17 வயதில் இந்த முயற்சியில் ஈடுபட்டுவிட்டதாகவும், அதற்காக முதல் முறையாக தன்னுடைய உதட்டில் பல்வேறு சாயங்களை பூசி தயார்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பகுதி நேர மொடல் ஆன இவர் ஏலியன் போன்று மாறவேண்டும் என்பதற்காக அதிகபட்ச தொகை செலவு செய்துள்ளார். அதிலும் அவர் தற்போது தனது பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவைகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவர் £130,000 செலவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு பிறப்புறுப்பு இல்லாத ஏலியனாக இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய வெளித்தோற்றத்தை தான் கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியுள்ளார்.

தன்னுடைய கவனம் முழுவதுமே ஏலியனாக மாறவேண்டும் என்பதே என்று கூறியுள்ளார்.

மேலும் பிறப்புறுப்பு இல்லாமல் இருப்பது சாத்தியம் எனவும் ஆனால் அதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டு என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments