மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்! பதற வைக்கும் சம்பவம்

Report Print Jubilee Jubilee in அமெரிக்கா

அமெரிக்காவில் திருடன் என நினைத்து மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கோல்ட்ஸ்போரோ நகரை சேர்ந்தவர் பில்லி வில்லியம்ஸ் (49). இவரது மனைவி ஜினா வில்லியம்ஸ் (48) அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இரவு வேலை முடிந்து திரும்பிய அவர், தனது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த பில்லி வில்லியம்ஸ் உடனே கண்விழித்தார்.

திருடன் தான் வீட்டிற்குள் நுழைந்துவிட்டதாக எண்ணிய அவர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஜினா வில்லியமை நோக்கி சுட்டார். அதில் அவரது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

உடனே அலறிய ஜினா வில்லியம்ஸ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பில்லி வில்லியம்ஸ் துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments