டிரம்ப் செய்தது சரிதான்: அமெரிக்க சட்டத்துறையே கூறிவிட்டதே

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக கேபினட் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்தார்.

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக தனது மருமகனான ஜாரெட் குஷ்னரை நியமித்தார்.

இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன, எனவே இதுகுறித்து அமெரிக்க சட்டத்துறையிடம் ஜனாதிபதி கருத்து கேட்டார்.

இதுதொடர்பாக அரசு துணை அட்டர்னி ஜெனரல் டேனியல் கோப்ஸ்சி 14 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் 1967-ம் ஆண்டு சட்டப்படி அரசு பதவிகளில் உறவினர்கள் நியமிக்கப்படலாம் என உள்ளது, பல ஆண்டுகளுக்கு முன்பு ஜான் கென்னடி தனது சகோதரர் ராபர்ட் கென்னடியை அட்டர்னி ஜெனரல் ஆக நியமித்துள்ளார்.

1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி தனது மருமகனை நியமித்தது சரியே என அமெரிக்க சட்டத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments