ஆபாச படத்தில் நடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்: அதிர்ச்சியில் மக்கள்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவி ஏற்றுக் கொண்டார்.

இவர் அமெரிக்காவின் ஜனாதியாக தேர்தலில் வெற்றி பெற்ற போது பொதுமக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைத்து போராட்டங்கள் வெடித்தன.

அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நாளில் அமெரிக்க மக்கள் பலர் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதுமட்டுமின்றி பெண்கள் அமைப்பும் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இது அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகமெங்கும் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்பும் டிரம்புக்கு எதிராக கோஷங்கள் இட்டனர்.

இந்நிலையில் தற்போது டிரம்ப் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆபாச படத்தில் நடித்துள்ளார் என கூறியுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆபாச படம் ஒன்றில் டிரம்ப் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

தற்போது பலரும் டிரம்புக்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த செய்தி டிரம்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments