அப்பிள் நிறுவன CEO-வின் ஊதியம் அதிரடியாக குறைப்பு: ஏன் தெரியுமா?

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கின் ஊதியம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் ஐபோன் வகைகள் முக்கிய கைப்பேசியாக திகழ்ந்து வருகிறது.

இதுமட்டுமில்லாமல், ஐபோன் விற்பனை மூலம் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டொலர்களை வருமானமாக அப்பிள் நிறுவனம் ஈட்டி வருகிறது.

இந்நிலையில், அப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) பதவி வகித்து வரும் டிம் குக்கின் கடந்தாண்டு ஊதியத்தை 15 சதவிகதமாக அப்பிள் நிறுவனத்தின் தலைமை குறைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, தற்போது டிம் குக் 8.7 மில்லியன் டொலர் ஊதியம் மட்டுமே பெற்றுள்ளார்.

கடந்தாண்டில் ஐபோன் விற்பனை தொடர்பான இலக்குகளை(Targets) அடையாமல் டிம் குக் தோல்வியை சந்தித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ஐபோன்கள் வெளியான 2007-ம் ஆண்டு முதல் கடந்தாண்டு தான் ஐபோன்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது.

இதன் மூலம் அப்பிள் நிறுவனத்திற்கு வரவேண்டிய வருமானம் 8 சதவிகிதம் குறைந்து 216 பில்லியன் டொலராக இருந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது தான் அதிகளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும், டிம் குக்கின் ஊதியம் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட அடுத்த 3 மாதங்களுக்கு பிறகு அவருடைய ஊதியம் இரண்டு மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments