உடல் ஊனமுற்ற வாலிபரை சரமாரியாக தாக்கிய கும்பல்: வெளியான பகீர் வீடியோ

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்காவில் உடல் ஊனமுற்ற வாலிபர் ஒருவரை இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகாக்கோ நகரை சேர்ந்த 18 வயதான வாலிபருக்கும் அதே நகரை சேர்ந்த 4 பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

உடல் ஊனமுற்ற அந்த வாலிபரை பழிக்கு பழி வாங்க நால்வரும் சரியான நேரம் பார்த்து காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாலிபரை நால்வரும் மறைமுகமான இடத்திற்கு கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர், நால்வரும் சேர்ந்த வாலிபரை சரமாரியாக தாக்கி தகாத வார்த்தைகளால் துன்புறுத்தியுள்ளனர்.

இச்சித்தரவதையின் உச்சக்கட்டமாக கழிவறையில் உள்ள அசுத்தமான நீரை வாலிபரின் வாயில் ஊற்றியுள்ளனர்.

மேலும், நால்வரும் தங்களது காலில் அணிந்திருந்த ஷு சாக்சுகளை நீக்கி வாலிபரின் வாயில் திணித்துள்ளனர்.

இக்காட்சியினை நால்வரும் பேஸ்புக்கில் உள்ள லைவ் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

நேரலையாக வெளியான இக்காட்சியை கண்டு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து புகார் அளித்த நிலையில் நால்வரும் உடனடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ‘இவ்வுலகில் தீயவையை விட நல்ல விடயங்கள் மக்கள் மத்தியில் உள்ளது’ என்பதை நிரூபிக்கும் வகையில் தாக்கப்பட்ட வாலிபருக்காக ஓன்லைன் மூலம் நிதி வசூலிக்கப்பட்டது.

சுமார் 10,000 டொலர் வசூலிக்க வேண்டும் என திட்டமிட்ட நிலையில், தற்போது இரண்டு தினங்களில் 1,00,000 டொலருக்கு மேல் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments