கண்ணீர் மல்க நெகிழ்ச்சி உரையாற்றிய மிச்செல் ஒபாமா

Report Print Raju Raju in அமெரிக்கா

சிறந்த கல்வியால் தான் அமெரிக்க ஜனாதிபதி பதவி தன் கணவர் ஒபாமாவுக்கு சாத்தியமானது என ஒபாமாவின் மனைவி மிச்செல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கும் ஒபாமாவின் பதவிகாலம் வரும் 20ஆம் திகதியுடன் முடிகிறது. இந்நிலையில் அவர் மனைவி மிச்செல் ஒபாமா நாட்டு மக்களுக்கு நன்றி உரையாற்றினார்.

அதில், இளைஞர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நாட்டுக்கு மிகவும் முக்கியம். எதற்காகவும் பயப்படாதீர்கள். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.

சிறந்த கல்வி எதையும் சாத்தியமாக்கும் அமெரிக்க ஜனாதிபதி பதவி என் கணவருக்கு கல்வியால் தான் சாத்தியமானது என ஆவர் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தது என் வாழ்வில் கிடைத்த மிக பெரிய கெளரவமாகும் மற்றும் அந்த அந்தஸ்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்தியிருப்பதாக நம்புகிறேன் என மிச்செல் ஒபாமா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments