ரூ.11 ஆயிரம் கோடி இழப்பீடு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மீது வழக்கு பதிவு

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்கா நாட்டை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மீது ரூ.11 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு வாலிபர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் JonBenet Ramsey என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவருக்கு Burke Ramsey என்ற சகோதரர் உள்ளார்.

சிறுமிக்கு 6 வயதாக இருந்தபோது அவரது வீட்டில் கடந்த 1996-ம் ஆண்டு மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பணம் கேட்டு சிறுமியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், கொலையாளியை இன்று வரை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒளிப்பரப்பாகும் CBS என்ற தொலைக்காட்சி நிறுவனம் சிறுமியின் கொலை வழக்கை மையமாக வைத்து The Case of JonBenet Ramsey என்ற நிகழ்ச்சியை தயாரித்து ஒளிப்பரப்பியது.

இந்நிகழ்ச்சியில் சிறுமியின் சகோதரரான Burke Ramsey தான் அவரை கொலை செய்ததாக நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியுள்ளனர்.

ஆனால், பல்வேறு கட்டங்களாக நிகழ்ந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு சகோதரர் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து வருமானம் ஈட்டும் நோக்கில் தன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிப்பரப்பிய சிபிஎஸ் நிறுவனம் மீது 750 மில்லியன் டொலர்(11232,75,00,000 இலங்கை ரூபாய்) இழப்பீடு கோரி Burke Ramsey வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த தொலைக்காட்சி நிறுவனம் வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தயார் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments