வெடித்து சிதறிய பிரபல பாடகரின் செல்போன்! வெளியான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Report Print Jubilee Jubilee in அமெரிக்கா

பிரபல அமெரிக்க பாடகரான CeeLo Greenன் செல்போன் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வெளியான வீடியோவில், CeeLo Green தனது ஸ்டூடியோவில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது செல்போனில் வந்த ஒரு அழைப்பை எடுத்து பேசிக் கொண்டே தனது வேலையைத் தொடர்கிறார்.

இந்நிலையில் அந்த போன் திடீரென பலத்த சப்தத்துடன் வெடிக்கிறது. உடனே அவர் தனது சேரில் இருந்து கீழே விழுகிறார். அதன் பிறகு அவர் மீண்டும் எழவே இல்லை.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவருக்கு என்ன ஆனது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பேஸ்புக் லைவ்வில் பேசிய CeeLo Green, நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறினார்.

மேலும், ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய Green, இது எதிர்வரும் ஆல்பம் ஒன்றிக்காக எடுக்கப்பட்ட வீடியோ என விளக்கம் அளித்தார்.

உண்மையில் செல்போன் வெடித்தது போன்று வெளியான இந்த சிசிடிவி காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments