அமெரிக்க கப்பலை சிறைப்பிடித்த சீனா! டிரம்பின் ஆவேச டுவிட் இதுதான்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USNS Bowditch என்ற போர்க்கப்பல் தென் சீனக் கடல் பகுதியில் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 15ம் திகதி பிலிப்பைன்ஸை ஒட்டியுள்ள கடற்பகுதியில் சீனா, அமெரிக்க கப்பலை சிறைப்பிடித்தது.

இதற்கு பென்டகன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உடனடியாக தங்களிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியது.

இதனையடுத்து சீனாவும் ஒப்படைக்க முன்வந்தது, இந்நிலையில் இதுதொடர்பாக டுவிட் செய்துள்ள அமெரிக்காவின் வருங்கால ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆளில்லா விமானத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டாம், அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என சீனாவிடம் நாம் கூறிவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தைவான் விவகாரத்தில் ஒன்றுபட்ட சீனா என்ற கொள்கை குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்திருந்த நிலையில், சீனாவின் இந்த செயல் இருநாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments