தேர்தல் தோல்விக்கு காரணம் யார்? அதிரடியாக வெளியிட்டார் ஹிலாரி கிளிண்டன்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தான் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

நியூயார்க் நகரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட பேசிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது,

தேர்தலில் தான் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் என அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

புடினுக்கு என்னுடன் இருக்கும் தனிப்பட்ட பகைமை காரணமாகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டு தனக்கு எதிராக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

என்னுடன் இருக்கும் பகைமை காரணமாக அவர் நாம் நாட்டின் தேர்தல் முறைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2011ம் ரஷ்யாவில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் ஒரு மோசடி என ஹிலாரி கிளிண்டன் குறற்ம்சாட்டினார். இதனையடுத்து, ரஷ்யாவில் ஹிலாரிக்கு எதிராக தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது நினைவுக்கூரத்தக்கது.

இதற்கு ஜனாதிபதி புடினும் கடும் கண்டனங்களை தெரிவித்தார். இச்சம்பவத்தை அடுத்தே இருவருக்கும் இடையில் பகைகை நிலவி வருகிறது என கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments