எச்1பி விசா கெடுபிடிகள்: அமெரிக்காவுக்கு உலக வர்த்தக அமைப்பு பதிலடி

Report Print Fathima Fathima in அமெரிக்கா

எச்1பி, எல்-1 விசாக் கட்டணங்களை உயர்த்துவதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பு விதிமுறைகள் பிரச்சினைகளை இந்தியா எழுப்பியதையடுத்து தற்போது எச்1பி விசா மீதான அமெரிக்காவின் கெடுபிடிகள் உலக வர்த்தக அமைப்பின் பதிலடி தலையீட்டுக்கு இட்டுச் செல்லும் என்று அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை அறிக்கை (CRS) எச்சரித்துள்ளது.

“இவ்விவகாரம் முறையான தகராறு தீர்ப்பாய கட்டத்துக்கு நகர்ந்தால், இதனால் ஏற்படும் விளைவு காட்ஸ் ஒப்பந்த விதிமுறைகளுக்குப் புறம்பாக அமெரிக்கா செயல்படுவதாக உலக வர்த்தகக் கழகம் முடிவெடுக்கும் வாய்ப்புள்ளது.

காட்ஸ் ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்ப அமெரிக்கா தனது சட்டத்தை மாற்ற வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு பரிந்துரை செய்யும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடளுமன்றத்தின் தனித்துவ, சுதந்திர ஆய்வுக் கழகமான சிஆர்எஸ், மேலும் அமெரிக்காவை எச்சரித்த போது, தேவையான சட்டத்திருத்தங்களை நாடாளுமன்றம் கொண்டு வரவில்லையெனில் உலக வர்த்தக அமைப்பு காட்ஸ் உடன்படிக்கை விதிமுறைகளுக்கு அமெரிக்கா இணங்குமாறு சில பதிலடி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

நவம்பர் 16-ம் தேதியே அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த 2 பக்க சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை பாதிக்கும் எச்1பி விசா கெடுபிடிகளைக் கைவிட வேண்டும் என்று இந்தியா, அமெரிக்காவை கடந்த மார்ச் மாதம் உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்ப்பாயத்திற்கு இழுத்தது.

அதாவது காட்ஸ் ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுகிறது என்று இந்தியா சாடியுள்ளது. இது உலக வர்த்தக கூட்டமைப்பு உறுப்பு நாடுகளை பிணைக்கும் ஒப்பந்தமாகும். இதன் படி அமெரிக்க மற்றும் அமெரிக்கர் அல்லாத பணியாளர்கள் என்று பாகுபாடு காட்டுவது முடியாது.

எனவே, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடொன்று மற்றொரு உறுப்பு நாடு மீது காட்ஸ் விதிமுறை மீறல் விவகாரத்தை முதல் முறையாக எழுப்பியுள்ளது.

காட்ஸ் ஒப்பந்தங்களின்படி “அதிக சலுகை அளிக்கப்படும் நாடு தகுதி” என்பது உறுப்பு நாடுகளிடையே பாரபட்சம் காட்டுவது, ஒருநாட்டுக்கு சாதகமாகச் செயல்படுவது என்பது தடைசெய்யப்பட்டவையாகும்.

இந்த சிஆர்எஸ். அறிக்கையில் மேலும் கூறும்போது, எச்1பி விசா கெடுபிடிகளை அதிகரிக்கும் குடியேற்ற சட்டப்பிரிவுகள் இந்திய நிறுவனங்களை குறிவைத்து இயற்றப்படவில்லை என்றாலும் அந்தச் சட்டப்பிரிவுகளை திட்டமிட்டு உருவாக்கியவிதம் இந்திய நிறுவனங்களை பாதிக்கவே செய்யும் என்று நிபுணர்கள் பலரும் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சட்டங்கள் உலக வர்த்தக அமைப்பு, காட்ஸ் ஒப்பந்தங்களுக்கு இணங்கவே இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தாலும், விசா கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்வதாக அமெரிக்கா, இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கை குடியேற்ற சட்டத்திருத்தங்கள் பற்றி கவனமாக இருக்குமாறு அமெரிக்க ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளது.

- Thehindu

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments