நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது - மர்ம அழைப்பு யாருடையது?

Report Print Sujitha Sri in அமெரிக்கா

சுமார் 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளையில் லுப்தான்ஸா நிறுவனத்திற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது.

ஹுஸ்டனில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கு சென்று கொண்டிருக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்ந மர்ம அழைப்பினூடு பேசிய நபர் எச்சரித்துள்ளார்.

இதனையடு விமானிக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டு நியூயோர்க் மாநில வான்வெளியில் பறந்த விமானத்தினை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

இதன்படி, நியூயோர்க் நகரில் உள்ள ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும் இதேவேளை பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தற்போது வெடிகுண்டு நிபுணர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments