பூமிக்கு எச்சரிக்கை - அழிவைச் சந்திக்க தயாராகுங்கள்!!

Report Print Mawali Analan in அமெரிக்கா

பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்கின்றார்கள் என்பது தொடர்பிலும், பூமியை தாக்க அவர்கள் தயாராகி வருகின்றார்கள் என பல கதைகள் அண்மைக்காலமாக அதிகமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

ஆனாலும் அதற்கான ஆதாரங்கள் கூறப்படுவது இல்லை, எனினும் 2016 பிறந்தது முதல் இந்தக் கருத்து வலுப்பெற்று வருகின்றது. வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் உலக நாடுகள் நாளுக்கு நாள் எச்சரிக்கை அடைந்து வருகின்றது.

உலக வல்லரசான அமெரிக்காவையே பதறவைத்த சம்பவம் எது வெனில் அது 9.11 தாக்குதல் எனப்படும் இரட்டைக்கோபுர தாக்குதல், தீவிரவாதச் செயல் இது எனக் கூறி அமெரிக்கா தீர்ப்புகளும் பெற்றுக்கொண்டது.

இது தொடர்பில் ஆதாரமற்ற சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவருகின்ற போது இது வேற்றுக்கிரக வாசிகள் மூலமாக நடைபெற்ற தாக்குதல் ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.

இரட்டைக்கோபுர தாக்குதல் நடந்த தினம் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த கோபுரத்தை பல தடவைகள் சுற்றி வந்துள்ளனர். அவை தெளிவாக கெமராக்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றினை ஆய்வு செய்த வேற்றுக்கிரக ஆய்வாளர்கள் குறித்த தாக்குதல் வேற்றுக்கிரக வாசிகள் மூலம் நடாத்தப்பட்டது என அடித்துக் கூறுகின்றனர்.

குறித்த காணொளிகள் இது வரையில் வெளிப்படுத்தப்படாத ஒரு சில காணொளிகள் வந்தாலும் நிரூபிக்கப்பட வில்லை, அவை போலியானவை என மறுக்கப்பட்டன. எனினும் இப்போது இவை மேற்குலக ஊடகங்களில் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

மறைக்கப்பட்டவை இப்போது வெளிவரக்காரணம் உலகம் எதிர்கொள்ள உள்ள ஆபத்து தொடர்பில் பூமி வாசிகள் படிப்படியாக எச்சரிக்கை செய்யப்படுவதற்காகவே எனவும் கூறப்படுகின்றது.

உலக நாடுகள் இவ்வாறான காரணத்திற்காகவே தற்போது விண்வெளி ஆய்வுகளில் அதி ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்க அதிபர் மாற்றமடைந்ததன் பின்னர் அமெரிக்கா திட்டமிட்டு வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் மறைத்த உண்மைகள் தற்போது அம்பலமாக்கப்படுகின்றது.

எப்படியாயினும் பூமி நிச்சயம் விரைவில் வேற்றுக்கிரக வாசிகளால் தாக்கப்படும் எனவும், அதனை எதிர் கொள்ள மேற்குலகம் மறைமுகமாக தயாராகி வருகின்றது எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் அதிகளவான செய்திகளை தற்போது வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக அழிவுக்கொள்கைகளோடு தற்போது வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பிலும் பல உண்மைகள் வெளிவருகின்றமை, அழிவை சந்திக்க பூமிவாசிகள் தயார் படுத்தப்படுகின்றார்கள் என்பதற்காகவே.

எந்த ஒரு விடயமும் திடீரென்று போட்டுடைத்தால் அது பல எதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும், அதற்காகவே படிப்படியாக மறைக்கப்பட்ட விடயங்கள் மெதுவாக வெளிப்படுத்தப்படுகின்றன என்று கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments