சுவாரசியமான உண்மை சம்பவம்! இன்றைய காதலர்கள் கண்டிப்பாக படிக்கவும்

Report Print Raju Raju in அமெரிக்கா

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தன்னுடைய பாதி கல்லீரலை தானம் செய்ததோடு மட்டுமில்லாமல் அந்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்ட ஒரு நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் Heather Krueger(27). இளம் பெண்ணான இவருக்கு கல்லீரல் சம்மந்தமான நோய் இருந்துள்ளது.

இது பற்றி அவர் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்த, அவர்கள் உடனே பாதிக்கப்பட்ட கல்லீரல் பகுதியை மாற்ற வேண்டும், இல்லையெனில் சில மாதங்கள் மட்டுமே Heather உயிருடன் இருக்க முடியும் என கூறினார்கள்.

உடனே Heather மாற்று கல்லீரல் தனக்கு வேண்டும் என விளம்பரம் கொடுத்தார். பலர் கொடுக்க முன்வந்தார்கள்.

ஆனால் அவர்களின் ரத்த வகை அல்லது கல்லீரல் அளவு என எதாவது Heather-க்கு பொருந்தாமலே இருந்து வந்தது.

இந்நிலையில், கடல் சார்ந்த பணியாளரான Chris Dempsey-க்கு இந்த விடயம் தெரிய வர அவர் தன் கல்லீரலை கொடுக்க முன்வந்தார்.

அதற்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற அவரின் கல்லீரல் Heather-க்கு பொருத்தமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

பின்னர் ஒரு நாளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடைபெற்றது.

இருவரின் உடல் நிலையும் தேறி வந்த நிலையில் நெருங்கிய நண்பர்களாக இருந்த Chris, Heather காதலர்களாக மாறினார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

உலகத்திலேயே மிக அற்புதமான மனிதர் எனக்கு வாழ்க்கை துணையாக கிடைத்துள்ளார்.

எனக்கு மறு ஜென்மத்தையும் அளித்து, வாழ்க்கையையும் கொடுத்தவர் Chris என Heather நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments