விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆவார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தனது மனைவி மிச்சேலுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய இவர், அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாடி வருகிறார்.

தீபவாளியை முன்னிட்டு இவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

கடந்த 2009ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய முதல் ஜனாதிபதி என்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியா சென்ற போது, எனக்கும் மிச்செல்லுக்கும், அங்குள்ள மக்கள் அளித்த வரவேற்பை மறக்க முடியாது.

எங்களுடன் ஒன்றாக சேர்ந்து நடனமாடி இந்திய மக்கள் மக்கள் தீபாவளியை கொண்டாடினர்.

இந்த வருடம் ஓவல் அலுவலகத்தில், முதல்முறையாக விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுவதில் பெருமைப்படுகிறேன். வாழ்க்கையில், இருளை அகற்றி, வெளிச்சத்தை கொண்டு வருவதை இந்த விளக்கு குறிக்கிறது.

இந்த பாரம்பரியத்தை அடுத்து வரும் ஜனாதிபதியும் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது கொள்கிறேன்.

இந்த பண்டிகையானது, தீயதை ஒழித்து நல்லது வெற்றி பெறுவதும், அறியாமையை அகற்றி நல்ல ஞானம் கொள்வதும் இந்த பண்டிகையின் சிறப்பம்சம் எனக்கூறியுளளார்.

ஒபாமாவை தொடர்ந்து ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments