தாய்ப்பால் கொடுக்கும் படத்தை பதிவிட்ட தாய்! பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு!

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கும் அந்நியர் ஒருவரின் குழந்தைக்கும் ஓரே நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டதிற்காக அவரின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

மிசோரி மாகாணத்தை சேர்ந்த ரெபேக்கா வானோசிக் என்ற பெண்ணின் பேஸ்புக் பக்கமே முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெபேக்கா கூறியதாவது, நண்பர் ஒருவரிடம் குறுந்தகவல் வந்நதது.

அந்நியர் ஒருவரின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா? என கோரியிருந்தார்.

அந்த குழந்தையின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை புட்டி பால் குடிக்க மறுக்கிறது என தெரிவித்திருந்தார்.

இத்தகைய நேரத்தில் என்னுடைய குழந்தைக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை தான் நான் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

ரெபேக்கா வானோசிக் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் கணவர் நடந்ததை விளக்கி ஆதரவு கோரி அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். குறித்த பதிவுக்கு மக்களிடையே ஆதரவு பெருகியது.

இதனையடுத்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, பெண்ணின் பேஸ்புக் முடக்கப்பட்டது தவறுதலாக நடைபெற்றது. அதனை மீண்டும் சரிசெய்துவிட்டோம். பல லட்சம் புகார்கள் வருவதால் இது போன்ற தவறுதல்கள் நடைபெறுகின்றன என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments